மேலும் செய்திகள்
மிரட்டல் புகாரில் கந்து வட்டி ஆசாமி கைது
15-Mar-2025
உள்ளூர் வர்த்தக செய்திகள்* ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 19 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 172.72 ரூபாய், குறைந்தபட்சம், 127.09 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 9.50 குவிண்டால் தேங்காய் பருப்பு, 1.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் முல்லை பூ ஒரு கிலோ,1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-, 855, காக்கடா-700, செண்டுமல்லி- 70, கோழிகொண்டை-70, கனகாம்பரம்-500, சம்பங்கி-140, அரளி-100, துளசி-40, செவ்வந்தி-180 ரூபாய்க்கும் விற்பனையானது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், 393 மூட்டை நிலக்கடலை வரத்தானது. காய்ந்த நிலக்கடலை அதிகபட்சம் கிலோ, 75 ரூபாய், குறைந்தபட்சம், 67 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 133 குவிண்டால் வரத்தாகி, 8.83 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 45 ரூபாய், நேந்திரன், 50 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவன் தார், 600, தேன்வாழை, 530, செவ்வாழை, 900, ரஸ்த்தாளி, 620, பச்சைநாடான், ரொபஸ்டா, தலா, 410 ரூபாய்க்கும், மொந்தன், 210 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 7,450 வாழைத்தார்களும், 14.30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் ஒரு கிலோ, 167 ரூபாய் முதல் 176 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 1,115 கிலோ தேங்காய் பருப்பு, 1.73 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
15-Mar-2025