மேலும் செய்திகள்
உரிமையாளரை தாக்க முயன்ற பைனான்ஸ் ஊழியருக்கு சிறை
24-Mar-2025
தொழிலாளியை தாக்கியவாலிபருக்கு காப்புஈரோடு:ஈரோடு, வில்லரசம்பட்டி, தொட்டம்பட்டியை சேர்ந்தவர் சுதாகர், 36, கூலி தொழிலாளி. இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், 29, அவர் தந்தை பூபதி, 52, மது போதையில் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதையறிந்த சுதாகர் இருவரிடமும் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரசாந்த், அரிவாளால் சுதாகரின் முகம், கை, கால்களில் வெட்டினார். சுதாகர் புகாரின்படி விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், பிரசாந்த் மற்றும் பூபதி மீது எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்து பிரசாந்த்தை கைது செய்தனர். பிரசாந்த் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று வழக்குகள் வீரப்பன்சத்திரம் போலீசில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
24-Mar-2025