உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்ஈரோடு:இருகூரில் டிரைவர்கள் தங்கும் அறையை மூட வேண்டும். கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சரக்கு டிப்போவை திறக்க வேண்டும். தொடர் இரவு பணி முறையை குறைக்க வேண்டும். வருமான வரியில் இருந்து ரன்னிங் அலவன்ஸ், 70 சதவீதம் விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.இ.எஸ். (சதர்ன் ரயில்வே எம்ப்ளாயிஸ் சங்கம்) மற்றும் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.ஆர்.இ.எஸ். கோட்ட செயலாளர் பாண்டியன், லோகோ ஓடும் தொழிலாளர் சங்க கோட்ட செயலாளர் அருண் குமார், நரசய்யா ஆகியோர் தலைமை வகித்தனர். ஏராளமான டிரைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை