மேலும் செய்திகள்
'ஓரணியில் தமிழ்நாடு' இன்று பொதுக்கூட்டம்
20-Sep-2025
ஈரோடு :ஈரோட்டில் தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாநகர செயலர் சுப்பிரமணியம் வரவேற்றார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 'ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு' உறுதிமொழியை வாசித்து, அனைவரும் ஏற்ற பின், பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க., கொடுத்த அனைத்து வாக்குறுதிகளை செயல்படுத்தியதுடன், அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. நிதி நெருக்கடி, தமிழகத்துக்கான திட்டங்களுக்கு நிதி வழங்காதது, தமிழக நலனுக்கு எதிரான பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மக்களை ஒருங்கிணைக்கவே, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற குரலை எழுப்பி, அனைத்து மக்களும் ஆதரவு வழங்கி, உறுப்பினராகி, தங்கள் கருத்து ஒற்றுமையை வழங்கி உள்ளனர். இதன் பிரதிபலிப்பு வரும், 2026 தேர்தலில் தெரியவரும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Sep-2025