ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜாக்டோ - ஜியோ சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருங்கிணைப்பு குழு விஜயமனோகரன், சரவணன், வீராகார்த்திக், மதியழகன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, 2010க்கு முன்பாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்க, தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.