மண்டல பூஜை நிறைவு
சென்னிமலை,சென்னிமலையில் காங்கேயம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மார்ச், 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வந்தது.''' மண்டல நிறைவு நாளான நேற்று, 48-வது நாள் பூஜை நடந்தது. இதில் சிறப்பு யாக பூஜை, சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.