உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குரூப்-4 மாதிரி தேர்வில் 220 பேர் பங்கேற்பு

குரூப்-4 மாதிரி தேர்வில் 220 பேர் பங்கேற்பு

குரூப்-4 மாதிரி தேர்வில் 220 பேர் பங்கேற்புஈரோடு:ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு, மாதிரி பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. நேற்று இங்கு பயிற்சி பெறுவோருக்கு நடந்த மாதிரி தேர்வில், 220 பேர் பங்கேற்றனர்.இதுபற்றி, உதவி இயக்குனர் ராதிகா கூறியதாவது: குரூப்-4 தேர்வு வரும் ஜூலை, 13ல் நடக்க உள்ளது. இதற்கான மாதிரி தேர்வு தற்போது நடந்து வருகிறது. வாரம்தோறும் புதன் அன்று மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத பயிற்சி பெற்று வருவோர், தனியார் மையத்தில் பயிற்சி பெறுவோர் இப்பயிற்சி மற்றும் மாதிரி தேர்விலும் பங்கேற்கலாம். மாதிரி தேர்வு எழுத விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம். இவ்வாறு கூறினார். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சாந்தி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ