மேலும் செய்திகள்
டாஸ்மாக் பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்
06-Apr-2025
கோபி:தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கோபி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்டத்தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கதிரவன் வரவேற்றார். கோட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாநில செயலாளர் செந்தில்நாதன் பேசினர்.தொழிற்சங்க கொடிமரம், தகவல் பலகையை அகற்றி, தொழிற்சங்க கூட்டு பேர உரிமை பறிப்பு மற்றும் ஜனநாயக படுகொலை நிகழ்த்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.திருச்சி நெடுஞ் சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கண்ணன், உதவி கோட்டப் பொறியாளர் புகழேந்தி ஆகியோர் அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து, போராட்டத்தை துாண்டும் போக்குக்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
06-Apr-2025