உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாராயகாய்ச்சியவர் சிக்கினார்

சாராயகாய்ச்சியவர் சிக்கினார்

ஈரோடு:சித்தோடு, கங்காபுரம் நரிபள்ளத்தை சேர்ந்தவர் ரவி, 50; இவரது தோட்டத்தில், கோபி மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். இதில் எட்டு லிட்டர் சாராயம், 20 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சிய பாத்திரம், அடுப்பை கைப்பற்றினர். பெருந்துறை அருகே மணியம்பாளையம் கிராமத்தில் கடந்த, ௧௫ல் சாராயம் காய்ச்சிய, பட்டதாரிகள் இருவரை, ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கங்காபுரத்தில் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் பிடிபட்டுள்ளது, மதுவிலக்கு போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை