உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணிக்கு அழைப்பு

பணிக்கு அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், பாதுகாப்பு அலுவலர் பணிக்கு, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. சமூகப்பணி, சமூகவியல், குழந்தை வளர்ச்சி, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், மனநலம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 27,804 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.விண்ணப்ப படிவம், erode.nic.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களுடன் வரும், 15ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டடம், 6ம் தளம், ஈரோடு' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி