மேலும் செய்திகள்
மாணவி, சிறுமி மாயம்
30-Sep-2025
ஈரோடு, ஈரோடு கீழ்திண்டல் பெரியார் காலனியை சேர்ந்தவர் ராஜா மனைவி சாந்தி, 40; கணவர் இறந்து விட்டதால், வீட்டு வேலைகளை செய்து குடும்பத்தை கவனிக்கிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் இளவரசி பாலிடெக்னிக் கல்லுாரி முதலாமாண்டு மாணவி. கடந்த, 13ம் தேதி மாலை கல்லுாரியில் இருந்து வீட்டுக்கு வந்தார்.வீட்டு வேலை செய்யாததால் தாய் கண்டித்துள்ளார். மறுநாள் கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. சாந்தி புகாரின்படி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
30-Sep-2025