உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

ஈரோடு, ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், புகைப்பட கண்காட்சி ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சமீனா, கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். ஈரோடு மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீவித்யா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருஷ்ணபிரியா மற்றும் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள் உடனிருந்தனர். சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி