உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் காந்தி, நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு டிச., 4, 5ல் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி நடக்க உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் தினமும், காலை, 10:00 - மதியம், 2:00 மணி வரை நடக்க உள்ளது. காந்தி குறித்து பள்ளி மாணவர்கள், 'காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள்' என்ற தலைப்பில் பேச வேண்டும். கல்லுாரி மாணவர்களுக்கு, 'காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்தியசோதனை' ஆகிய தலைப்பு தரப்பட்டுள்ளது.இதேபோல் நேரு குறித்து பள்ளி மாணவர்களுக்கு, 'சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம்' என்ற தலைப்பு; கல்லுாரி மாணவர்களுக்கு, 'சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவு கொள்கை' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பேருக்கு தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். இதில்லாமல் சிறப்பு பரிசும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !