மேலும் செய்திகள்
போதை மாத்திரை ௨ பேர் கைது
05-Jan-2025
2வது கணவருடன் வாழ்ந்தஇளம்பெண் விபரீத முடிவுஈரோடு, :ஈரோடு, சூரம்பட்டி, வ.உ.சி., வீதியை சேர்ந்த மீனாட்சியின் இளையமகள் தாரணி, 29; கடந்த, 2018ல் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்தார். ஈரோடு, முனிசிபல் காலனி ஜான்சி நகரில் வசித்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏழு மாதங்களுக்கு முன் பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்தார். தனியார் மகளிர் சுய உதவிக்குழு வசூல் பிரிவில் வேலை செய்தார்.ஈரோடு, கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரை சேர்ந்த நண்பர் சண்முகவேலை, 2024 அக்.,ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தாய் வீட்டிலிருந்து சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை தாரணி மொபைல்போனில் அவரது தாயாரை தொடர்பு கொண்ட சண்முகவேல், சமையலறையில் தாரணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். தாய் மீனாட்சி புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jan-2025