மேலும் செய்திகள்
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 13,176 பேர் பங்கேற்பு
06-Mar-2025
பிளஸ் 2 தேர்வு நிறைவுமாணவர்கள் உற்சாகம்ஈரோடு:மார்ச், ௩ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுதேர்வு நேற்று முடிந்தது. இறுதி தேர்வாக இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. தேர்வு நிறைவடைந்ததும் மையத்தை விட்டு, மாணவ--மாணவிகள் உற்சாகமாக வந்தனர். மொபைல் போனில் செல்பி எடுத்து உற்சாக தருணத்தை பதிவு செய்து கொண்டனர். சில பள்ளிகளில் நடனமாடியும், நோட்டு பேப்பர்களை கிழித்து வீசியும் மகிழ்ந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில பள்ளிகள் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தாண்டு தேர்வில் காப்பி அடித்தல், பிட் அடித்தல். விடைத்தாள் மாற்றுதல் உள்ளிட்ட எவ்வித புகார்களும் எழவில்லை என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
06-Mar-2025