சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு
ஈரோடு : ஈரோட்டில் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு, மரப்பாலம், ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன் மகன் ஷேக் சதாம் உசேன், 24; கூலித் தொழிலாளி. ஈரோட்டைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, 2021ல் வீடு புகுந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி விசாரித்த, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஷேக் சதாம் உசேனுக்கு, 20 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சுவர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.