3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை நுாறு நாள் திட்ட தொழிலாளர் மறியல்
'3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை' நுாறு நாள் திட்ட தொழிலாளர் மறியல்பவானிசாகர்,: பவானிசாகர் யூனியனில், 15 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் நுாறு நாள் வேலை திட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இதில் உத்தண்டியூர், புங்கார், தொப்பம்பாளையம் பஞ்., உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதை கண்டித்தும், சம்பளத்தை உடனடியாக வழங்க கோரியும், புங்கார் பஞ்சாயத்தை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், புங்கார் பஞ்., அலுவலகம் எதிரில், பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்காமல், மறியலை தொடர்ந்ததால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். நுாறு நாள் வேலை திட்டத்தை பொறுத்தவரை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துள்ளோம் என்றார். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மாறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.