உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிக்கு அடிமையானவர் 2வது முயற்சியில் சாவு

குடிக்கு அடிமையானவர் 2வது முயற்சியில் சாவு

ஈரோடு: ஈரோடு, சாஸ்திரி நகர், கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் யுவராஜ், 44, கூலி தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையானதால், சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மனைவி பாக்யலட்சுமியிடம் மது குடிக்க கடந்த, 9ம் தேதி பணம் கேட்டார். அவர் மறுக்கவே விஷ மாத்திரையை தின்றுவிட்டார். குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த யுவராஜ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். யுவராஜ் ஏற்கனவே குடும்ப தகராறில், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். சிகிச்சை மூலம் குணமடைந்த நிலையில், தற்கொலைக்கே இரையாகி விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ