மேலும் செய்திகள்
இன்று இனிதாக
20-Aug-2024
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அனைத்து நிலை நிர்வாகிகளை அழைத்து கொடியேற்றுதல் மற்றும் ஆக்கப்பணிகளை செய்தல் பற்றி விவாதிக்க வேண்டும்.இதன்படி நாளை காலை, 10:00 மணிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றியம் வெள்ளோடு சதா மஹாலிலும், மாலை, 4:00 மணிக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றியம் காஞ்சிகோவில் தங்கம் மஹாலிலும் கூட்டம் நடக்கிறது. 29ல் கொடுமுடி மேற்கு ஒன்றியம் சிவகிரி மகாமாரியம்மன் கோவிலிலும், மாலை, 4:00 மணிக்கு மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் கிருஷ்ணா மஹாலிலும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
20-Aug-2024