விடுதியில் தங்கி படித்த 10ம் வகுப்பு மாணவி மாயம்
ஈரோடு: திருச்சி, செந்தண்ணீர்புரம், நேரு வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. தனியார் ஓட்டல் மேலாளர். இவர் மனைவி பானு. சிப்-காட்டில் ஒரு மில்லில் விடுதி காப்பாளராக வேலை செய்கிறார். இவர்களின் மகள் அனுஷ்கா, 15; ஈரோடு, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். பள்ளி ஹாஸ்-டலில் தங்கியுள்ளார். கடந்த, 24ம் தேதி மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அனைத்து மாணவிகளும் வீட்டுக்கு சென்றனர். ஆனால், 24ம் தேதி காலை விடுதி காப்பாளரிடம் சொல்லாமல், விடுதி காப்-பாளர் நோட்டில் உறவினர் வந்து கூட்டி சென்று விட்டதாக, அனுஷ்காவே எழுதி வைத்து விட்டு ஹாஸ்டலை விட்டு வெளி-யேறியுள்ளார். விடுதி காப்பாளர் அவரது தாய் பானுவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள், தோழிகள் வீடுகளுக்கும் மாணவி செல்லவில்லை. பானு அளித்த புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.