உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறந்த மகப்பேறு சேவைக்காக நம்பியூர் சுகாதார நிலையத்துக்கு தேசிய சான்று

சிறந்த மகப்பேறு சேவைக்காக நம்பியூர் சுகாதார நிலையத்துக்கு தேசிய சான்று

நம்பியூர் : நம்பியூர் அரசு சமூக சுகாதார நிலையம், சிறந்த மகப்பேறு சேவைக்கான, லக்சயா என்னும் தேசிய தர சான்றிதழை பெற்றுள்-ளது. அரசு மருத்துவமனை மற்றும் அரசு சமூக சுகாதார நிலையங்-களில், பிரசவம் மகப்பேறு அறுவை சிகிச்சை மற்றும் பேறுகால கவனிப்பில் உள்ள சேவைகளுக்காக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 2018ல் லக்சயா தர மேம்பாட்டு திட்டத்தை துவங்கியது. இதில் தேர்வு செய்யப்படும் மருத்துவமனைகளுக்கு, தேசிய அளவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தேசிய சான்றிதழ் விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது.இதில் ஈரோடு மாவட்டத்தில், சிறந்த மகப்பேறு சேவைக்கான தரச்சான்றை, நம்பியூர் அரசு சமூக சுகாதார நிலையம் பெற்று சாதனை படைத்துள்ளது. பிரசவ அறை சேவையில், 96 சதவீத மதிப்பெண், அறுவை சிகிச்சை அரங்க சேவைகளுக்கு, 97 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளது. இதே மருத்துவமனை கடந்த, 2019-ல் தேசிய தர சான்றிதழ் பெற்றது. 2018ல் தேசிய காயகல்ப விருதும், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான காயகல்ப விருதும் பெற்றுள்ளதாக, நம்பியூர் அரசு சமூக சுகாதார நிலைய மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற பணியாளர்கள் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ