உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீக்குளித்த பெயிண்டர் சாவு

தீக்குளித்த பெயிண்டர் சாவு

பவானி: சித்தோடு அருகேயுள்ள கொங்கம்பாளையம், ஆவுடையான்காடு, கருப்புசாமி கோவில் நகரை சேர்ந்தவர் அர்ஜூன், 57, பெயிண்டரான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த, 25ம் தேதி வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில், மனைவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மனைவி சிகிச்சைக்கு சென்ற நிலையில், பெயிண்ட்டில் கலக்கும் தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ