உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம்

அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: அஞ்சல் துறையை பல கூறாக்கி, தனியார் மயமாக்கும் நடவ-டிக்கையை கைவிட வேண்டும். ஆர்.எம்.எஸ்., இணைப்பால் தொழிலாளர் பாதிப்பை உணர்ந்துள்ளதால், அனுமதிக்க கூடாது. அஞ்சல் சேமிப்பு வங்கி பணிகளை, இந்தியா போஸ்ட் பேமென்ட் பாங்க்கின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கூரியர் நிறுவனம் போல அதிகாலை, மாலை நேரமும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் டெலிவெரி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அஞ்சல் துறையில் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன், அகில இந்திய அங்சல் ஊழியர் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மண்டல செயலாளர் ராமசாமி தலைமையில் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ