மேலும் செய்திகள்
மண்டல பூஜை துவக்கம்
04-Feb-2025
கோபி : கோபி அருகே பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. இதை தொடர்ந்து யானை வாகனத்தில் சுப்ரமண்ய சுவாமி வீதியுலா, யாகசாலை நடந்தது. நாளை முத்து விநாயகருக்கு மகன்யாச அபிேஷகம், பதி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், திருக்கல்யாண உற்சவம், மாலை, 4:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 12ம் தேதி காலை மூலவர் மற்றும் சண்முக சுப்ரமண்யருக்கு அபிஷேகம், வெள்ளை சாற்றி அலங்காரம், உற்சவர் சுப்ரமண்யசுவாமி புஷ்ப ரதத்தில், வெள்ளாளபாளையம் சென்று வருதல் நடக்கிறது.
04-Feb-2025