உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் உண்டியல் திருட்டு

கோவிலில் உண்டியல் திருட்டு

கோவிலில் உண்டியல் திருட்டுபவானி, செப். 6-பவானி சங்கமேஸ்வரர் கோவிலின் உப கோயிலான, காசி விஸ்வநாதர் கோவில், அக்ரஹார வீதியில் உள்ளது. நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி சிவா, கோவில் நடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கருவறை பூட்டு, 'சிசிடிவி' கேமரா உடைக்கப்பட்டு, உண்டியல் திருட்டு போனது தெரிந்தது. பவானி போலீசார், கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது. கோவில் அருகில் உள்ள ஒரு 'சிசிடிவி' கேமராவில் மர்ம ஆசாமி ஒருவர், நள்ளிரவு, 2:௦௦ மணியளவில் உண்டியலை திருடி செல்வது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை