கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை தினமான நேற்று, வழக்கம்போல் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்தனர். தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் வெளியேறிய, 220 கன அடி தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர். அங்கு சுடச்-சுட விற்பனையான மீன் ரோஸ்ட்டுகளை வாங்கி சுவைத்தும், சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்தும், பரிசல் பயணம் சென்றும் பொழுதை கழித்தனர்.