உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1-00 நாள் வேலை திட்ட நிதி தாமதம்தி.மு.க., 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்

1-00 நாள் வேலை திட்ட நிதி தாமதம்தி.மு.க., 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்

1-00 நாள் வேலை திட்ட நிதி தாமதம்தி.மு.க., 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்ஈரோடு:தமிழகத்தில், 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, நேற்று ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியம் சார்பில், அவல்பூந்துறை நால் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நெசவாளர் அணி செயலர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேசியதாவது:தமிழகத்தில் அனைத்து பஞ்.,களிலும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, 5 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதுபற்றி, பார்லிமென்ட்டில் தி.மு.க., எம்.பி.,க்கள் பேசியபோது கூட, பிரதமர் மோடி எந்த பதிலும் வழங்காமல் தவிர்த்தார்.மத்தியில் தி.மு.க., - காங்., கூட்டணியில் ஆட்சி நடந்த போது, 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, அதை முடக்க நினைக்கின்றனர். டில்லி சென்று பிரதமரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூட, இந்நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. தனது உறவினர் வீடுகளில் நடந்த, சோதனை தொடர்பான நடவடிக்கையை கைவிடக்கோரி பேசிவிட்டு வந்துள்ளார்.இவ்வாறு பேசினார்.இதேபோன்று எட்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ