உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தையை பிடிக்க 10 கேமரா பொருத்தம்

சிறுத்தையை பிடிக்க 10 கேமரா பொருத்தம்

சென்னிமலை:சென்னிமலை மலை வனப்பகுதியில் பதுங்கியுள்ள ஒரு சிறுத்தை, அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் புகுந்து, ஆடு, மாடு, நாய், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினமே சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கினர்.இந்நிலையில் நேற்று சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட தட்டாங்காடு, சில்லாங்காட்டுவலசு, கல்குவாரி மேடு, குட்டக்காடு, வக்கீல் தோட்டம், பாலகாட்டு தோட்டம் உள்ளிட்ட 10 இடங்களில் தானியங்கி கேமராக்களை நேற்று பொருத்தினர். இதன் அடிப்படையில் கூண்டு வைக்கவும் வனத்துறை அதிகாரிகள் தீர்மானித்து, முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ