உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ்-லாரி மோதலில் 10 பயணிகள் காயம்

பஸ்-லாரி மோதலில் 10 பயணிகள் காயம்

பெருந்துறை, சென்னிமலையில் இருந்து பவானிக்கு ஒரு லாரி நேற்று காலை சென்றது. கரூரை சேர்ந்த ராஜலிங்கம், 26, ஓட்டினார். அதேசமயம் திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு தனியார் பஸ் வந்தது. பெருந்துறையை சேர்ந்த சதீஷ்குமார், 29, பஸ்சை ஓட்டினார்.பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே திரும்பும்போது பஸ்சும், லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டது. இதில் பஸ்சில் பயணித்த, ௧௮ வயது முதல் ௬௧ வயது வரையிலான, ஆண், பெண் பயணிகள், ௧௦ பேர் காயமடைந்தனர். அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
ஜூன் 22, 2025 05:31

பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்துகள் ரவுண்ட் வில் இருந்து 100மீட்டர் இடமாற்றம் செய்ய வேண்டும் ஈரோடு, சென்னிமலை. ரவுண்டான் சற்று சிறியதாக மேற்கு நோக்கி நகர்த்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை