108 சங்காபிஷேகம்
கோபி:கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், 83வது ஆண்டு ஏகதின லட்சார்ச்னை விழா, 24ல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை, 108 வலம்புரி சங்காபிஷேகம், மதியம் பாவாடை நைவேத்யம், மகா தீபாராதனை, அம்பாள் மற்றும் அமரபணீஸ்வரர் திருவுலா காட்சி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.