உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு காலாண்டு தேர்வு துவக்கம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது.அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு கடந்த 10ல் காலாண்டு தேர்வு துவங்கி நடந்து வருகிறது. நேற்று ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு துவங்கியது. இதில் மெல்ல கற்கும் திறன் மாணவர்களுக்கு என தனியாகவும், பிற மாணவர்களுக்கு தனியாகவும் தேர்வு நடந்தது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும், 17ல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. 25 வரை தேர்வு நடக்கிறது. தேர்வுகள் துவங்கியதால் பள்ளிகளில் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடக்கவில்லை. மாறாக ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு மதிய உணவுடன் சேர்த்து அரசு உத்தரவின்படி, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை