12 மொபைல்போன் திருட்டு
ஈரோடு:ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் வாகித்காளி, 38; ஈரோடு பெரியார் நகரில் இரு ஆண்டாக மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். கடந்த, 2ம் தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்துள்ளனர். இரு ஐ-போன், 10 மொபைல் போன்களை திருடி சென்றுள்ளனர். வாகித்காளி புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.