போக்குவரத்து விதிமீறல் 1,365 வழக்குகள் பதிவு
காங்கேயம் :காங்கேயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுடுகின்றனர். விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து அபராதம் வசூலிக்கின்றனர். கடந்த மாதம் நகரில் நடத்திய வாகன சோதனையில், பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 1,365 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.௧௬ லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.