மேலும் செய்திகள்
போக்குவரத்து விதிமீறல் ஒரே நாளில் 814 வழக்கு
20-Jan-2025
ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரியின் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 155 பேர் மீது குடிபோதையில் வாகனம் இயக்கியதாக வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் மொபைல் போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 56, ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதாக 868, டூவீலரின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 15, சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதாக 15, டிரைவிங் லைசன்ஸ் இன்றி சென்றதாக 5, இதர பிரிவுகள் என மொத்தம் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக 1,675 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கான அபராத தொகை ஆறு லட்சத்து 31 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் இயக்கிய, 25 பேரின் டிரைவிங் லைசன்சை ரத்து செய்ய வேண்டும் என போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
20-Jan-2025