மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
06-Jul-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் இரு தினங்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக பெருந்துறையில், 18 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டில்-11, குண்டேரிபள்ளம் அணையில்-3.20 மி.மீ., மழை பெய்துள்ளது. உள்ளூர் வர்த்தக செய்திகள்* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 6,710 மூட்டைகளில், ௨.௭௮ லட்சம் கிலோ வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 230.15 ரூபாய் முதல் 264.39 ரூபாய்; இரண்டாம் தரம், 37.89 ரூபாய் முதல், 254.30 ரூபாய் வரை, ௬.௭௬ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 19,794 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 44.90 முதல், 66.90 ரூபாய்; கலங்கல் தேங்காய், 70.90 முதல், 76.69 ரூபாய் வரை, 8,196 கிலோ தேங்காய், 5.௮௪ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, ௬௪ விவசாயிகள், 18,985 தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 81.20 ரூபாய்ம், இரண்டாம் தரம், 60.65 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல், 1,501 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 160.20 ரூபாய் முதல், 251.30 ரூபாய் வரை ஏலம் போனது.* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 முதல், 1,400 ரூபாய்க்கு விற்றது. உருண்டை வெல்லம், 2,400 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 முதல், 1,430 ரூபாய்; அச்சு வெல்லம், 400 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,450 முதல், 1,480 ரூபாய்க்கு விற்பனையானது.* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நேற்று நடந்தது. பச்சை காய் கிலோ, 30 ரூபாய், சாலிபாக்கு கிலோ, 390 ரூபாய், பாக்கு பழம் கிலோ, 87.50-105.50 ரூபாய் வரை விலை போனது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 61 ரூபாய், நேந்திரன், 40 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 810, தேன்வாழை, 600, பூவன், 630, ரஸ்த்தாளி, 620, மொந்தன், 460, ரொபஸ்டா, 600, பச்சைநாடான், 530 ரூபாய்க்கும் விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 15 ரூபாய் முதல் 44 ரூபாய் வரை விற்பனையானது.* அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,200 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 920 ரூபாய், தேன்வாழை தார், 850, பூவன் தார், 700, ரஸ்தாளி தார், 780, மொந்தன் தார், 560, ஜி--9 தார், 440 ரூபாய்க்கும் ஏலம் போனது. கதலி கிலோ, 30-57 ரூபாய்; நேந்திரன் கிலோ, 18-40 ரூபாய் வரை விற்றது.
06-Jul-2025