மேலும் செய்திகள்
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
21-Mar-2026
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், தேர்தல் அறிவிக்கை செய்யப்பட்ட மார்ச், 15 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. அப்போது முதல் நடத்தை விதி, தங்கள் ஓட்டு குறித்த புகார், பிற வாக்காளர், வேட்பாளர் குறித்த புகார் என பல்வேறு புகார்கள் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம், சி-விஜில் ஆப், மெயில்ர, 1950 போன்ற பல்வேறு வழிகளில் பெறப்பட்டன. அப்புகார் குறித்து, தேர்தல் பறக்கும் படை, பிற அதிகாரிகள் மூலம் சோதனை, ஆய்வு செய்து தீர்வு கண்டனர். டோல் பிரீ எண்ணில், 38 புகார், சி-விஜில் ஆப்பில், 32, மெயில் மூலம், 65, 1950 என்ற எண்ணுக்கு, 1815, வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, 24 என மொத்தம், 1,974 புகார்கள் பெறப்பட்டன. உடனடியாக தேர்தல் அலுவலர்கள் மூலம் உறுதி செய்து, 1,971 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.
21-Mar-2026