உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

ஈரோடு:ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக, போலீசாரக்கு தகவல் வந்தது. கருங்கல்பாளையம் போலீசார் ரோந்தில் அங்கு சந்தேகப்படும்படியான நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில்வீதி எம்.ஜி.ஆர்., நகர் அமானுல்லா மகன் முகமது யூசூப், 21; நாட்ராயன் கோவில் வீதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் என தெரிந்தது. அவர்களிடம் சோதனை செய்தபோது, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்து, 40 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மாவட்ட சிறையில் யூசுப்பை அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ