உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் சிக்கிய 2 நாகப்பாம்புகள்

ஈரோட்டில் சிக்கிய 2 நாகப்பாம்புகள்

ஈரோடு:ஈரோட்டில் ஒரு தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிபவர் யுவராஜ். இவருக்கு சொந்தமான தோட்டம் மொடக்குறிச்சி அருகில் 24 வேலம்பாளையத்தில் உள்ளது. தோட்டத்தில் நேற்று தண்ணீர் பாய்ச்ச தொழிலாளி சென்றார். அப்போது 7 அடி நீள நாகப்பாம்பு படமெடுத்து ஆடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற யுவராஜ், நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு பாம்பை லாவகமாக பிடித்தார். இதேபோல் சின்னியம்பாளைத்தில் ஹாலோ பிளாக் கற்கள் விற்பனை செய்யும் கடையில் பதுங்கியிருந்த, 4 அடி நீள நாகப்பாம்பையும் யுவராஜ் மீட்டார். இரு பாம்புகளையும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை