உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இருவேறு விபத்தில் 2 முதியவர்கள் பலி

இருவேறு விபத்தில் 2 முதியவர்கள் பலி

கோபி:கோபி அருகே நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 80; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஸ்கூட்டியில் நல்லகவுண்டன்பாளையம் வழியே, பிரதான சத்தி சாலையை, நேற்று மதியம், 3:00 மணிக்கு கடக்க முயன்றார். கோபியை சேர்ந்த சண்முகப்பிரியா, 22, ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதியதில் தேவேந்திரன் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். * கோபி அருகே குள்ளம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த விவசாயி ரத்தினமூர்த்தி, 72; சுசுகி லெட்ஸ் மொபட்டில் குள்ளம்பாளையம் நால்ரோட்டை நேற்று காலை கடக்க முயன்றார். அப்போது சத்தியமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ், 28, ஓட்டி வந்த ேஹாண்டா சிட்டி கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இரு வழக்குகள் குறித்தும் கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ