உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 சம்பவங்களில் ரயில் மோதி இருவர் பலி

2 சம்பவங்களில் ரயில் மோதி இருவர் பலி

ஈரோடு:ஈரோடு அடுத்த பாசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, வேலம்பாளையம் ரயில்வே கேட் பகுதியில், மூதாட்டி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.இதில் பாசூர் வெள்ளோட்டம்பரப்பு வேலம்பாளையம் வீதி கருப்பணன் மனைவி மரகதம், 71, என தெரிந்தது. ஆடு மேய்க்க தண்டவாள பகுதியை கவனக்குறைவாக கடந்தபோது ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.இதே போல் சாவடிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாள பகுதியில் வாலிபர் சடலம் கிடந்தது. போலீசார் விசாரணையில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த மித்திலேஷ் குமார், 21, என தெரிந்தது. கோழி தீவன ஆலையில் வேலை செய்த நிலையில், 9ம் தேதி அதிகாலை தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, ரயில் மோதி பலியானதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை