மாணவி உள்பட 2 பேர் மாயம்
அந்தியூர்: அந்தியூர் சந்தியபாளையத்தை சேர்ந்த, 15 வயது மாணவி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த மாதம், 29ம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர் மாயமாகி விட்டார். பெற்றோர் புகாரின்படி அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோடு பழைய கரூர் பைபாஸ் ரோடு மோகன் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 33; ஒன் பாயிண்ட் சொல்யூஷன் பெயரில் இண்டீரியர் கம்பெனி நடத்தினார். ஆறு மாதமாக தொழில் சரிவர இல்லாததால் மன வேதனையில் இருந்தார். கடந்த, 28ம் தேதி அலுவலகம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை இளங்கோ புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.