உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,000 போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது

1,000 போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது

பவானி:பவானியில் ராணா நகரில், போதை மாத்திரை விற்பதாக கிடைத்த தகவலின்படி பவானி போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்திரசேகர், 29, என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில், 1,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டிப்ளமோ இ.இ.இ., முடித்த சந்திரசேகர், ரெட் டாக்ஸி டிரைவராக உள்ளார். இவருக்கு தெரிந்தவர் சித்தோட்டை சேர்ந்த நவீன், 21; டிப்ளமோ ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் முடித்தவர். ஜோமோட்டோ டெலிவரி ஊழியர். இவர் மூலம் வடமாநிலத்தில் இருந்து ஆன்லைனில் போதை மாத்திரைகளை கூரியர் நிறுவனம் மூலம் வாங்கி விற்றுள்ளனர். இவர்களிடம், 1,000 போதை மாத்திரைகள், மூன்று செல்போன், ஒரு கார் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ