உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 24 மணி நேர போலீஸ் ரோந்து: பரிசோதனை முறையில் துவக்கம்

24 மணி நேர போலீஸ் ரோந்து: பரிசோதனை முறையில் துவக்கம்

ஈரோடு: ஈரோட்டில் 24 மணி நேர போலீஸ் ரோந்து, (டெடிகேட்டட் பீட்) திட்டத்தை, எஸ்.பி. நேற்று துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கும் வகையிலும், விபத்துகளில் சிக்குவோரை உடனடியாக மீட்கும் விதமாகவும், இந்த திட்டத்தை எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி.,சுஜாதா துவக்கி வைத்தார். ஈரோடு, பெருந்துறை, பவானி சப்-டிவிசனை சேர்ந்த, 25 போலீசார் ரோந்து பணியை மேற்கொள்கின்றனர். முன்னதாக இவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணி, செயல்பாடுகள் குறித்து எஸ்.பி., அறிவுறுத்தினார்.இதுபற்றி எஸ்.பி., சுஜாதா கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள, 35 போலீஸ் ஸ்டேஷன்களில் பகலில் தலா ஒரு போலீஸ் பணியில் இருப்பர். இரவில் இரு போலீசார் இருப்பர். ஏற்கனவே பைக் பீட் போலீசார் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணிக்கு அவ்வப்போது அழைக்கப்படுவர். ஆனால் இவர்கள் அவ்வாறு பிற பணிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். இது பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்படுகிறது. வரும் நாட்களில் ரோந்து போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவர்களுக்கு என்று ஒரு மொபைல் வழங்கப்படும். அவசர போலீஸ் எண்-100க்கு வரும் அழைப்புகளும், இந்த ரோந்து போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்படும். பிரச்னைக்கு உரிய பகுதிக்கு ரோந்து போலீசார் சென்று அவற்றை தீர்ப்பர். ஸ்டேஷனுக்கு வரும் புகார், ரோந்து போலீசாரின் போனுக்கு வரும் அழைப்புகள் அடிப்படையில் பிரச்னைக்கு தீர்வு காண்பர். ரோந்து போலீசார் அனைவரும் 'பாடி ஓன்' கேமராவுடன் செல்ல வேண்டும். இவர்கள் 24 மணி நேரமும் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பில் இருப்பர். குறிப்பிட்ட இடத்தில் தங்கி மக்களின் பிரச்னையை கேட்கலாம். மனுவாக பெற்று தீர்வும் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை