சட்டசபை தேர்தலுக்காக 26 பறக்கும் படை குழு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிக்கு நடக்க-வுள்ள சட்டசபை தேர்தலுக்காக, ஈரோடு கிழக்கு, பவானிசாகர் தொகுதிக்கு மட்டும், 14 குழுக்களாக பறக்கும் படை குழுக்-களும், மற்ற ஆறு தொகுதிகளுக்கும், 12 குழுக்கள் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தேர்தல் பிரிவினர் கூறியதாவது: ஈரோடு மாவட்-டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகு-திக்கும் டீம்-1, 2, 3 என பிரித்து, ஒவ்வொரு டீமிலும் தலா, 3 குழுக்கள் என, 12 குழு கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்-டுள்ளது. ஒரு குழுவில் நான்கு பேர் இடம் பெறுவர். பவானி-சாகர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு மட்டும் கூடுதலாக தலா, 3 பறக்கும் படை குழு நியமித்துள்ளனர். மொத்-தமாக இக்குழுவில், 312 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியானதும், இவர்கள் அனைவரும் பணியை துவங்குவார்கள். ஒவ்வொரு குழுவிலும் உடன் வரும் அதிகா-ரிகள், எஸ்.எஸ்.ஐ., ஏட்டு, கான்ஸ்டபிள் பெயர், தொலைபேசி எண் கொண்ட விபரமும் வழங்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் தனியாக அரசு அல்லது தனியார் ஜீப் அல்லது கார் ஒதுக்கி, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி வழங்கப்-படும். அவர்களுடன் டிரைவர் மற்றும் ஒரு வீடியோ கிராபர்கள் இடம் பெறுவார்கள். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கும். இவ்வாறு கூறினர்.