பயிற்சி போட்டி தேர்வு 287 பேர் ஆப்சென்ட்
ஈரோடு,நான் முதல்வன் போட்டி தேர்வு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் மாணவ, -மாணவிகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது.இவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்தி, 1,000 பேரை தேர்வு செய்து மாதம், 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு, ஈரோடு சி.எஸ்.ஐ., மகளிர் மேல்நிலைப்பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக்பள்ளி, திண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் நேற்று நடந்தது. மொத்தம், 887 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 600 பேர் பங்கேற்றனர். 287 பேர் ஆப்சென்ட் ஆகினர்.