உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஆய்வுக்கு இடையே 29 மனுக்கள் ஏற்பு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஆய்வுக்கு இடையே 29 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு யூனியனுக்கு உட்பட்ட பகுதியில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் நேற்று காலை, 9:00 முதல் இன்று காலை, 9:00 மணி வரையிலான ஆய்வு நடக்கிறது.கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6 கோடி ரூபாயில் அமைக்கப்படும் நவீன தொழில் நுட்ப நுாலகத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார். பின், திருப்பதி கார்டன் பகுதியில், அம்ரூத் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 21 கோடி ரூபாயில் குடிநீர் திட்டப்பணிகள், சூரம்பட்டி மீன் மார்க்கெட் பகுதியில் ஈரோடை அருகில் உள்ள பொது சுகாதார வளாகத்தையும் ஆய்வு செய்தார்.மேலும் மாணிக்கம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட நீரேற்று நிலையம், கழிவு நீரேற்று நிலையம், மேட்டுநாசுவம்பாளையம் பஞ்., அலுவலகம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், சித்தோடு அடுத்த நல்லகவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இருந்து, 29 கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய அலுவலர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கூடுதல் கலெக்டர் அர்பித் ஜெயின், ஈரோடு ஆர்.டி.ஓ.,ரவி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை