உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை; கடிதத்தில் உருக்கம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை; கடிதத்தில் உருக்கம்

ஈரோடு: ஈரோடு அருகே உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே ந ஞ்சை ஊத்துக்குளி பொன்நகரை சேர்ந்தவர் நாகேந்திரன், 50; நகை ஆசா ரி. இவருக்கு வாய் புற்றுநோ ய் பாதிப்பு இருந்தது. இவரது மனைவி சசிகலாவுக்கு, 45; தைராய்டு பிரச்னை இருந்தது. இவர்கள் மகள் தான்யலட்சுமி, 20; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மூவருக்கும் உடல் ரீதியான பிரச்னை இருந்ததால், நாகேந்திரன் மன உளைச்சலில் இருந்தார். தாங்கள் இறந்த பின், மகளை யார் கவனித்து கொள்வர் என, அக்கம்பக்கத்தினரிடம் புலம்பி வந்தார். இதையடுத்து, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நண்பர்கள், உறவினர்களுக்கு நேற்று நள்ளிரவு, 1:௦௦ மணி அளவில் வாட்ஸாப்பில் தகவல் அனுப்பியுள்ளார். நேற்று காலை, தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்த போது, மூவரும் பாயில் சடலமாக கிடந்தனர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சடலத்தின் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதில், 'இந்த முடிவு அதிர்ச்சியாக இருக்கலாம்; வேறு வழியில்லை. தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. எங்கள் சொந்த சுய நினைவுடன் நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க உடல் ஆரோக்கியம் சார்ந்து எடுக்கப்பட்டது. 'கருங்கல்பாளையம் வீட்டில், என் மேஜை பெட்டியின் கீழ் டிராயரில், எங்கள் இறுதிச்சடங்கிற்கு, 25,000 ரூபாய் வைத்துள்ளேன். அதை எடுத்துக் கொள்ளவும். சிரமப்பட வேண்டாம். பெட்டி சாவியை ஸ்கூட்டர் சாவியுடன் இணைத்துள்ளேன்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. மொடக்குறிச்சி போலீசார், மூவரின் உடல்களையும் கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ