உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 100 நாள் வேலை திட்டத்துக்காக மறியல் 9 இடங்களில் 320 மாற்றுத்திறனாளி கைது

100 நாள் வேலை திட்டத்துக்காக மறியல் 9 இடங்களில் 320 மாற்றுத்திறனாளி கைது

ஈரோடு:வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும், வேலை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, மத்திய அரசு வி.பி.ஜி., ராம்ஜி வேலையளிப்பு திட்டம் என பெயர் மாற்றம் செய்து, விதிமுறைகளை மாற்றி உள்ளனர். இதனை கண்டித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நகர பொருளார் செந்தில்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் மாரிமுத்து கூறியதாவது:ஐ.நா., சபை கூறியபடி, கண்ணியமான வாழ்க்கை நடத்த அனைவருக்கும் வேலை உறுதி திட்டமாக, 100 நாள் வேலை திட்டம் அமலானது. தற்போது அத்திட்ட பெயரை, வி.பி.ஜி., ராம்ஜி வேலையளிப்பு திட்டம் என மாற்றி, 125 நாளாக உயர்த்தி, நேற்று முதல் தேசிய அளவில் அமலாகிறது. இந்நாளை மாற்றுத்திறனாளிகள் உட்பட இத்திட்ட பயனாளிகள் கருப்பு நாளாக கடைப்பிடித்து, மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இத்திட்டத்துக்கு முன்பு மத்திய அரசு முழு நிதி வழங்கியது. இனி, 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்க வேண்டும். முழு வேலை, முழு கூலி கிடைக்காது. வழிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகள் வேலை இழப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டி மறியல் செய்கிறோம். இவ்வாறு கூறினார்.மாவட்ட அளவில், 9 இடங்களில் நடந்த மறியலில், 320 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை