நுாலகம், அறிவுசார் மையத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா
கோபி:கோபி பழைய ஆஸ்பத்திரி வீதியில் இயங்கும், நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தின், மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.சேர்மன் நாகராஜ் தலைமை வகித்தார். கமிஷனர் மங்கையர்கரசன் பேசியதாவது:கடந்த, 2024ல் துவங்கிய நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், 3,000க்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன. இதுவரை, 26 ஆயிரத்து, 888 பேர், அறிவுசார் மையத்தில் பயனடைந்துள்ளனர். இங்கு கடந்த மூன்றாண்டுகளில், டி.என்.பி.எஸ்.சி., டெட், குரூப்-4, டி.ஆர்.பி., பேக்கிங் என போட்டி தேர்வுக்கு பயின்றவர்களில், 12 பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர், வேளாண், வருவாய், போலீஸ், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பணியில் சேர்ந்துள்ளனர். எனவே மாணவ, மாணவியர் இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்தி, தங்களின் வாழ்வை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.