மேலும் செய்திகள்
நெய்தல் உணவகத்தில் நள்ளிரவில் தீ விபத்து
24-Jun-2026
ஈரோடு:மொடக்குறிச்சி, சோளங்காபாளையத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான கரும்பு காட்டில் நேற்று மதியம், 12:20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மதியம்ல 2:15 மணி வரை போராடி தீயை அணைத்தனர். இதில் கரும்பு, சோகை, 70 தென்னை மரங்கள் (தென்னம் பிள்ளைகள்), வாழை தோட்டத்தில் இருந்த சருகுகள் தீக்கிரையாகின. மின் கம்பியில் இருந்து விழுந்த தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.* 46 புதுார் பெரியார் நகர் சின்னியம்பாளையத்தில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு தீ வைக்கப்பட்டதால், காற்றில் பரவி அருகில் இருந்த பறையன்காடு தோட்டத்திலும் தீ பிடித்தது. இதில் வைக்கோல் போர் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.* கஸ்பாபேட்டை செங்கோடம்பாளையம் வீதியில், ஜோதி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் கட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 50 வைக்கோல் போர் கட்டுகள் தீக்கிரையாகின. ஈரோடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.* ஈரோடு, மேளகவுண்டன்பாளையத்தில் சதீஷ் குமார் என்பவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் காய்ந்த புல்லில் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் முக்கால் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
24-Jun-2026